Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நீலத்தாமரை

neela-thaamarai

டைக்கா என்ற இசைக்கருவியின் சத்தம். அதைத் தொடர்ந்து இனிமையான ஒரு பிராமணிப் பாட்டு.

கிராமத்தில் இருக்கும் ஒரு கோவில். கேமரா இடது பக்கத்திலிருந்து வலது பக்கத்திற்கு நகர்கிறது. கோவிலும், கோவிலின் சுற்றுப்புறமும் காட்டப்படுகிறது. கூட்டம் அப்படியொன்றும் அதிகம் இல்லாத கோவிலுக்குள் கிராமத்தின் ஆண்களும் பெண்களும் போவதும் வருவதுமாய் இருக்கின்றனர். ஆலமரத்திற்குக் கீழே வட்டவடிவமாக இருக்கும் திண்டின் மேல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கிறார்.

குளத்தின் வெளிச்சுவர் மேல் கிராமத்து இளைஞர்கள் சிலர் உட்கார்ந்திருக்கின்றனர்.

கோவிலுக்குள் இருந்து வெளியே வரும் வயதான அந்த அம்மாவை நோக்கி நாம் படம் பார்ப்போரின் கவனத்தைக் கொண்டு செல்கிறோம். அவளுக்கு 55-லிருந்து 60-க்குள் வயது இருக்கும். நரைத்த முடி. ரவிக்கையும், முண்டும் அணிந்திருக்கிறாள். கோவிலின் ஆலமரத்திற்கு அருகில் அவள் இப்போது இருக்கிறாள்.

கிழவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே முன்னாலும் பின்னாலும் ஆடியவாறு என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். வயதான அந்த அம்மாவைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

ஆலமரத்திற்குக் கீழே அந்த வயதான அம்மாவும் கிழவரும்.

அம்மா:    கொஞ்சம் நைவேத்யம் தரட்டுமா?

கிழவர் வேண்டுமென்றோ, வேண்டாமென்றோ சொல்லாமல் முணுமுணுப்பை நிறுத்திவிட்டு, அந்த வயதான அம்மாவைப் பார்த்து புன்னகைக்கிறார். அந்த அம்மா கையில் இருந்த நைவேத்ய சாதத்தை இலையுடன் கிழவருக்கு முன்னால் வைக்கிறாள்.

அம்மா: இப்போ திடீர் கவிதை ஒண்ணும் தோணலியா?

கிழவரின் கவனம் சாதத்தின் மேல் இருக்கிறது. அதே நேரத்தில் அம்மாவின் கேள்வியின் மீதும் இருக்கவே செய்கிறது.

“அழுக்குள்ளோர் குளிக்க வேண்டும்

கவலையுள்ளோர் தொழ வேண்டும்

பசியுள்ளோர் கடவுளுடன் இருக்கவேண்டும்.”

அந்த அம்மா, கவிதையைக் கேட்டு சிரிக்கிறாள்.

அம்மா:    உப்பும், பச்சை மிளகாயும் வேணும்னா வாங்கிக்கங்க.

அம்மா நடந்து போகிறாள்.

2

டுத்தர வீடு. செறுமி (தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்) முற்றத்தைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். கோவிலில் இருந்து வந்த அம்மா அவளுக்குப் பின்னால் கோவணம் மட்டும் அணிந்து மூக்கொழுக நின்றிருக்கும் கருப்பு நிறச் சிறுவனைப் பார்த்து:

நீயும் வந்திருக்கியா? நைவேத்யச் சோற்றை ஆலமரத்துக்குக் கீழே இருந்த ஆசானுக்குக் கொடுத்துட்டேன். பாவம். பலகாரம் பண்றதுக்கு இங்கே ஆளு இல்ல. கொஞ்சம் நீரைக் கொதிக்க வச்சு சாயா போட்டுத் தர்றேன் நான். அதுவரை அங்கேயே கொஞ்சம் நில்லு.

செறுமி:   இவன் வாலு மாதிரி எப்பவும் என் பின்னாடியே வந்துர்றான்.

அந்த அம்மா வாசல் திண்ணையில் அமர்கிறாள்.

அம்மா:    பலகாரத்துக்கு அரைக்கிறதுக்கு என்னால முடியாது. ஒரு வேலைக்காரி கிடைக்காம நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்!

முற்றத்தைச் சுத்தம் செய்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு,

செறுமி:   யாராவது ஒரு வேலைக்காரி கிடைச்சபிறகு போனா போதும்னு நான் ஏற்கனவே இருந்தவங்கக்கிட்ட சொன்னேன். கேட்டாத்தானே?

அம்மா:    கேட்டா எது வேணும்னாலும் கொடுப்பேன். அதை விட்டுட்டு திருட்டுத்தனம் பண்ணினா, நிறுத்தாம என்ன பண்றது? அன்னைக்கு நான் கொஞ்சம் அவ தப்பை உணரட்டுமேன்னு சொன்னேன். அவ்வளவுதான். மூஞ்சியைத் தூக்கி வச்சிக்கிட்டா. யாராக இருந்தாலும் கேட்கத்தானே செய்வாங்க? (எழுந்து) தொழுவுல சாணியை வாரிட்டு, கன்னுக்குட்டியைக் கொண்டு போய் கட்டு. அதுக்குப் பிறகு வாசலைப் பெருக்கினா போதும்...

உள்ளே போகிறாள்.

கிழக்கும்பாட்டெ வீட்டின் சமையலறை. அம்மா தேநீர் தயார் பண்ணுகிறாள். ஏதோ ஒரு சிறு அரவம் கேட்டு அந்த அம்மா பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். கணக்குப்பிள்ளை அச்சுதன்நாயர். 50-லிருந்து 55 வயதிற்குள் இருப்பார். சமையலறைக்கு வெளியே மரியாதையுடன் அவர் நின்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறாள்.

அம்மா:    என்ன ஆச்சு அச்சுதன் நாயர்?

அச்சுதன் நாயர்: நான் பலர்கிட்டயும் சொல்லியிருக்கேன். வடக்கு வீடு தேவம்மாவுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. கஞ்சி குடிக்க வழியே இல்லைன்னாலும், வேலைக்கு அவுங்களை அனுப்பி வைக்க மாட்டேன்னுட்டா. என்ன செய்றது? வேற யாரையாவது பார்க்க வேண்டியதுதான்.

அம்மா:    ஹரிதாசன் வந்துட்டான்னு வச்சுக்கங்க. பிறகு ஒரு நாளைக்கு நாற்பது தடவை சாயா போட வேண்டியதிருக்கும். அவனைப் பார்க்குறதுக்கு ஆளுங்க வருவாங்க. அவங்களுக்கும் சாயா கொடுக்கணும். ரெண்டு வேளைக்கு சமைக்கணும். என்னால கொஞ்ச நேரம்கூட சமையலறையில இருக்க முடியல. காலு பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிடுது...

அச்சுதன் நாயர்: அடிவாதம் காரணமாத்தான் அந்த வலி வருது. வைத்திய மடத்தோட மருந்து தீர்ந்து போச்சுன்னா, சொல்லுங்க.

அம்மா:    (குரலைச் சற்று தாழ்த்தி) வேலைக்கு வர்ற வேலைக்காரி நாயரா இருக்கணும் அது இதுன்னு பார்த்தா இந்தக் காலத்துல நடக்காது. நல்ல சுத்தமா இருக்குறதா இருந்தா, யாரா இருந்தாலும் பரவாயில்ல....

அச்சுதன் நாயர்: (வெற்றி பெற்றுவிட்ட மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு- அதே நேரத்தில் நேராகப் பார்க்காமல்) நான் அதைத்தான் உங்கக்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அப்ப நடந்த மாதிரிதான்.

அம்மா:    (தேநீரைக் கலந்தபடி) அந்தக் காலத்துல வேற ஜாதிக்காரங்க, வீட்டுக்குள்ளே நுழைய முடியுமா? ஹரிதாசன் கூடப் படிக்கிறவங்க வந்தாங்கன்னா நேரா மேலேல்ல அவன் கூட்டிட்டுப் போறான். போன ஓண சமயத்துல வந்தவங்களை அச்சு நாயர், நீங்க பார்த்தீங்களா? அவங்க போன பிறகு ஹரிதாசன் சொன்னான்- வந்தவங்கள்ல ஒரு ஆளு மாப்பிள்ளை. ஒரு ஆளு செறுமன்னு. (வாய் திறந்து சிரித்தவாறு) அவன் சொல்லலேன்னா நமக்கே தெரியாது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பசங்க!

ஒரு டம்ளர் தேநீரை அச்சுதன் நாயர் முன் அம்மா நீட்டுகிறாள். அதை அச்சுதன் நாயர் பவ்யமாக வாங்குகிறார்.

உள்ளே யாரோ அழைக்கும் குரல் கேட்கிறது.

“மாளு அக்கா... மாளு அக்கா...”

அச்சுதன் நாயர்: குட்டிசங்கர மேனன் வர்றார்.

அம்மா மீதி இருந்த தேநீரையும், தனக்கென்றிருந்த தேநீரையும் பார்த்தவாறு ஆலோசிக்கிறாள்.

சுமார் ஐம்பது வயது மதிக்கக்கூடிய குட்டி சங்கரமேனன். கிராமத்து மனிதர். பார்த்தால் முட்டாளைப் போன்ற தோற்றம். அப்பிராணி.

அம்மா:    ம்...?

குட்டிசங்கரன்:  ஒண்ணுமில்ல... படியில கால் வச்ச உடனே வயித்துல ஒரு சத்தம். கொஞ்சம் குடிக்க கஞ்சி இருக்குமா?

அம்மா:    செறுமிக்குக் கொடுக்குறதுக்குத்தான் கொஞ்சம் கஞ்சி இருக்கு. (தன் கையில் இருந்த டம்ளரை நீட்டியவாறு) இதைக் குடிங்க.

குட்டிசங்கரன்:  (கணக்குப் பிள்ளையிடம்) குடலை ஆப்பரேஷன் பண்ணின பிறகு எனக்கு இப்படித்தான். எப்ப பசி வரும்னே தெரியல. வந்திருச்சுன்னு வச்சுங்கங்க, அப்பவே கஞ்சியோ சோறோ வேணும். இல்லாட்டி மயக்கம் வர்ற மாதிரி இருக்கும்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version