Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Forrest Gump
(ஹாலிவுட் திரைப்படம்)
இந்த படத்தை நான் பார்த்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. ஆனால், இப்போதும் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் என் மனதில் பசுமையாக இருந்து கொண்டிருக்கிறது. கவித்துவ உணர்வுடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு அருமையான படம். இத்தகைய தன்மை கொண்ட ஒரு படத்தை நாம் எப்போதாவது ஒரு முறைதான் பார்க்க முடியும்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
டானி
(மலையாள திரைப்படம்)
என் இதயத்தின் அடித் தளத்தில் உயிர்ப்புடன் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப் படம். படத்தின் கதாநாயகன் - மம்மூட்டி. பல மிகச் சிறந்த கலைத் தன்மை கொண்ட படங்களை இயக்கி, விருது பெற்றிருக்கும் டி.வி. சந்திரன் இயக்கிய காவியம் என்றே நான் இதை கூறுவேன்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
வசந்த மாளிகை
(தமிழ் திரைப்படம்)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த காதல் காவியம். 1972ஆம் ஆண்டில் டி.ராமாநாயுடு தயாரிக்க, கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி வெள்ளி விழாவைத் தாண்டி ஓடிய படம். தெலுங்கில் கோடூரி கவுசல்யா தேவி எழுதிய நாவலே இதற்கு அடிப்படை. அங்கு நாகேஷ்வர ராவ், வாணிஸ்ரீ நடிக்க ‘ப்ரேம் நகர்’ என்ற பெயரில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகே தமிழில் தயாரிக்கப்பட்டது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
காகஸ் கே ஃபூல்
(இந்தி திரைப்படம்)
இந்திப் படவுலகில் காவியங்களை உருவாக்கிய குரு தத் கதாநாயகனாக நடித்து, இயக்கி, தயாரித்த படம். ‘காகித மலர்’ என்பதுதான் படத்தின் தலைப்பு. 1959ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த படத்தை ஏற்கெனவே நான் இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் மூன்றாவது தடவையாக பார்த்தேன். எந்தவொரு வேறுபாடும் எனக்கு தெரியவில்லை. காலத்தை வென்ற காவியம் என்று கூறுவார்களே… அது இந்தப் படத்திற்குப் பொருந்தும்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
உஸ்தாத் ஹோட்டல்
(மலையாள திரைப்படம்)
2012ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஒரு புதுமையான கதையை இதற்கென எழுதியிருந்தார் அஞ்சலி மேனன். இந்தப் படத்தின் கதைக் கரு, உணர்ச்சிகரமான காட்சிகள், சீராக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை, கலைஞர்களின் அருமையான பங்களிப்புகள் – இவை அனைத்துமே என்னை பெரிதும் கவர்ந்தன.