தி கன்ஸ் ஆஃப் நவரோன்
- Details
- Category: சினிமா
- Written by சுரா
- Hits: 4437

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி கன்ஸ் ஆஃப் நவரோன்
(ஆங்கில அமெரிக்க திரைப்படம்)
உலக திரைப்பட ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் படம். 1961 இல் இப்படம் திரைக்கு வந்தது. வருடங்கள் எத்தனையோ கடந்து விட்டாலும், கையாளப்பட்ட கதைக் கரு, அது படமாக்கப்பட்ட விதம், தேர்ந்த நடிப்புக் கலைஞர்களின் அபார பங்களிப்பு, மிகச் சிறந்த தொழில் நுட்பங்கள் ஆகியவற்றால் எல்லா காலங்களிலும் நிரந்தர இடத்தைப் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத படைப்பு இது.