Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி கலர் ஆஃப் பேரடைஸ்
(ஈரானிய திரைப்படம்)
மாறுபட்ட திரைப்படங்களை இயக்கி, உலகமெங்கும் இருக்கும் திரைப்பட ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு மிகச் சிறந்த பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கும் புகழ் பெற்ற ஈரான் நாட்டு திரைப்பட இயக்குநர் Majid Majidi. அவர் இயக்கிய படங்களைப் பார்ப்பதற்கென்றே, நல்ல ரசனை கொண்ட கூட்டம் இருக்கிறது. அவர் இயக்கிய ஒரு அருமையான படமிது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
நாட் ஒன் லெஸ்
(சீன திரைப்படம்)
என் மனதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப்படம்.
சீனாவிலிருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக்கூடம், அதில் படிக்கும் மாணவர்கள், அங்கு வாழும் சாதாரண மக்கள், அவர்களின் வாழ்க்கைகள் - இவைதான் இப்படத்தின் மைய அம்சங்கள். இவற்றை வைத்துக் கொண்டு ஒரு உலகத் தரம் வாய்ந்த படமாக இதை இயக்கியிருக்கும் புகழ் பெற்ற சீன திரைப்பட இயக்குநரான Zhang Yimou வை நாம் உயரத்தில் வைத்து கட்டாயம் கொண்டாட வேண்டும்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஆகஸ்ட் ரஷ்
(அமெரிக்க திரைப்படம்)
இசைப் பின்னணியில் எடுக்கப்பட்ட காதல் கலந்த ஒரு அருமையான குடும்பக் கதை. படத்தின் கதை கிட்டத்தட்ட நம் இந்தியப் படங்களில் வரும் கதையைப் போலவே இருக்கும். எனினும், நம்மை படத்தில் தீவிரமாக ஒன்றச் செய்வது- படம் முழுக்க ஆட்சி செய்யும் இசையும், நடிகர்களின் அசாத்தியமான நடிப்பும், உணர்ச்சிகரமான காட்சிகளும், திடீர் திடீர் என்று உண்டாகக்கூடிய திருப்பங்களும், கவித்துவம் நிறைந்த காட்சிகளும் தான்.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தன்மாத்ர
(மலையாள திரைப்படம்)
நான் பார்த்து வியந்த படம். மலையாளப் படவுலகில் ஒரு மிகப் பெரிய பரபரப்பை இப்படம் திரைக்கு வந்தபோது உண்டாக்கியது. படத்தின் கதாநாயகன் மோகன்லால். 2005 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் ப்ளெஸ்ஸி. பி.பத்மராஜன் எழுதிய ‘ஓர்ம’ (ஞாபகம் அல்லது நினைவு என்று அர்த்தம்) என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
அல்ஸெய்மர் ((Alzheimer) என்ற ஞாபக மறதி நோயை மையமாக வைத்து அமைக்கப்பட்டதே இப்படத்தின் திரைக் கதை.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கத்தாம
(மலையாள திரைப்படம்)
என்னைப் பெரிதும் பாதித்த ஒரு சிறந்த படம் இது. வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களை அரேபிய மொழியில் ‘காதிமா’ என்று அழைப்பார்கள். அதன் பேச்சு வழக்கு வார்த்தையே ‘கத்தாம’.
சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் செல்லும் மலையாளியான ஒரு ஏழை இளம் பெண்ணை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் கதை இது. அந்த ஏழை பெண்ணாக நடித்திருப்பவர் – மலையாளப் படவுலகில் கடந்த பத்து வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவ்யா மாதவன்.