Category: சினிமா Written by சுரா
தி ப்ராமிஸ் (The Promise)
(2016-ஹாலிவுட் திரைப்படம்)
சுரா
2016
ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் டெர்ரி ஜார்ஜ். படத்தின் கதாநாயகன் ஆஸ்கர் இஸாக். ஓட்டோமான் ஆட்சியின் இறுதி காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் டோரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றது.
Category: சினிமா Written by சுரா
மூன்லைட் (MOON LIGHT)
(2016 - ஹாலிவுட் திரைப்படம்)
சுரா
2017
ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஹாலிவுட் திரைப்படம். இது ஒரு உண்மைக் கதை. ராணுவத்தில் பணியாற்றும் மேகான் லீவி என்ற பெண்ணையும், அவளுடன் சேர்ந்து திறமையுடன் செயல்பட்ட ரெக்ஸ் என்ற மோப்பம் பிடிக்கும் நாயையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது. இப்படத்தின் இயக்குநர் கேப்ரியேலா கவ்பெர்த்வைட். பிரபல அமெரிக்க திரைப்பட நட்சத்திரம் கேட் மாரா, மேகான் லீவி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார், ஹார்ட்லேண்ட் திரைப்பட விழாவில் இப்படத்திற்கு ‘மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படம்’ என்ற பிரிவில் விருது அளிக்கப்பட்டது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஏ தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட்- A Thousand Times Good Night
(நார்வே திரைப்படம் 2013)
ஏ தவ்சன்ட் டைம்ஸ் குட் நைட் -- 2013 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த நார்வே நாட்டு திரைப்படம். படத்தின் இயக்குநர் எரிக் போப் (Erik Poppe). படத்தின் கதாநாயகி ஜுலியட் பினோச்சே (Juliette Binoche). ஆங்கில மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் 117 நிமிடங்கள் ஓடக் கூடியது. 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற 'மான்ட்ரியல் உலக திரைப்பட விழாவில்' இப்படத்திற்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்தது.
ஒரு பெண் புகைப்பட கலைஞரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாறுபட்ட படமிது. படத்தின் கதை என்ன என்பதைப் பார்ப்போமா?
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
துல்பன் - Tulpan
(கஸாக்ஸ்டான் நாட்டு திரைப்படம்)
2008 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த கஸாக்ஸ்டான் நாட்டு திரைப்படம் 'துல்பன்'. 100 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படம் கஸாக், ரஷ்ய மொழிகளில் எடுக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவிற்கு 'அயல்மொழி திரைப்படம்' என்ற பிரிவின் கீழ் திரையிடப்படுவதற்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டாவது ஆசியா-பசிபிக் திரைப்பட விழாவில் பங்கு பெற்று இப்படம் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது.
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, அதே ஆண்டில் நடைபெற்ற மான்ட்ரியல் திரைப்பட விழா ஆகிய விழாக்களிலும் 'துல்பன்' சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதைப் பெற்றது.
Category: சினிமா Written by சுரா
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
கேக்ஸிலி: மவுண்டன் பேட்ரோல் - Kekexili: Mountain Patrol
(சீன திரைப்படம்)
2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த சீன திரைப்படம். 90 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை எழுதி, இயக்கியவர் லூ சுவான் (Lu Chuan).
திபெத் பகுதியில் இருக்கும் கேக்ஸிலி என்ற வறண்டு கிடக்கும் பாலைவனப் பகுதியில் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது. அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு வகை மான் இனத்தின் தோலுக்கும், மாமிசத்திற்கும் ஆசைப்பட்டு அவற்றைச் சட்டத்திற்கு விரோதமாக வேட்டையாடும் ஒரு கும்பலையும், அவர்களைக் கையும் களவுமாக பிடிப்பதற்காக முயற்சிக்கும் ரிட்டாய் (Ritai) என்ற மனிதரையும், அவரின் ஆட்களையும் சுற்றி பின்னப்பட்டதே இப்படத்தின் கதை.