Category: ஆரோக்கியம் Published Date Written by சுரா Hits: 18149
நலம் தரும் நல்லெண்ணெய் - சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)
அமெரிக்காவிலிருந்து பிரசுரமா கும் ‘ லூர்தே சால்வடார்’ என்ற பத்திரிகையின் 2007 ஏப்ரல் 21 தேதியிட்ட இதழைப் படிக்கும்போது என்னுடைய கண்கள் வியப்பில் விரிந்துவிட்டன. ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர். கராச் உருவாக்கிய ‘ஆயில் புல்லிங்’என்ற விஷயம் எவ்வளவு நோய்களை குணப்படுத்துகின்றன என்ற பட்டியலைப் பார்த்தபோது ஆச்சரியப்படாமல் எப்படி இருக்கமுடியும்?
டாக்டர்.கராச் தன் ஆய்வுக் கட்டுரையில், “ ‘ஆயில் புல்லிங்’ தலைவலி, தொண்டைக்கட்டு, பல் வலி, ரத்தக் கட்டு, அல்சர், வயிற்றில் உண்டாகும் நோய்கள், குடல் நோய்கள், இதயம், ரத்தம், சிறுநீரகம், ஈரல், நுரையீரல் ஆகியவற்றில் உண்டாகும் நோய்கள், நரம்பு நோய்கள், பக்கவாத நோய், புற்றுநோய், தூக்கமின்மை ஆகியவற்றையும் குணப்படுத்தி இயல்பு நிலையை உண்டாக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.
‘ஆயில் புல்லிங்’ பண்ணுவது என்று தீர்மானித்தபிறகு, அதற்கான எண்ணெய்க்கு எங்கே போவது என்ற குழப்பம் உங்களுக்கு உண்டாகலாம். அந்த எண்ணெய்க்காக வேறு எங்கும் நாம் போய் தேடி அலைய வேண்டாம். சமையல் செய்வதற்காக வீடுகளில் பயன்படுத்தும் நல்லெண்ணெய்யே போதுமானது!
நல்லெண்ணெய்யை சிறிதளவு எடுத்து, தினமும் பல் துலக்குவதற்கு முன்னால் வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்தால், மேலே கூறப்பட்டு இருக்கும் அத்தனை நோய்களையும் நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் நல்லெண்ணெய்யே குணப்படுத்திவிடுகிறது.
அதனால், நாம் போகும் இடங்கள்தோறும் நல்லெண்ணெய்யை உடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்!
நோய் வந்தபிறகு குணப்படுத்த முயற்சிப்பதைவிட, நோய் வருவதற்கு முன்பே அது வராமல் பார்த்துக்கொள்வதுதான் சாலச் சிறந்தது. அதற்கு ஒரே வழி ‘ஆயில் புல்லிங்’ செய்வதுதான் என்பதை மீண்டும் மீண்டும் கூறவேண்டுமா என்ன?
‘ஆயில் புல்லிங்’கைப் பற்றிய தகவல்களை இணையதளத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது, சில இடங்களில் நல்லெண்ணெய்யுடன் சூரியகாந்தி எண்ணெய்யையும் பயன்படுத்தலாம் என்று இருந்தது. அது எனக்கு ஒருவிதத்தில் ஆச்சரியத்தைத் தந்தது. காரணம் - சில மாதங்களுக்கு முன்பு பிரசுரமாகி வெளியே வந்த தினமணி கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில், ‘ரீஃபைண்ட் ஆயில் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தினால், புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று வெளியிட்டிருந்ததை நான் படித்திருந்தேன். சூரியகாந்தி எண்ணெய்கூட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தான்.
சுத்தமான எண்ணெய்க்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கும் வேறுபாடு இருக்கிறதே! சுத்தமான நல்லெண்ணெய் (Filtered Oil) இருக்கும்போது, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை (Refined Oil) எதற்காக பயன்படுத்த வேண்டும்? ஏன் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என் மனம் அசைபோட்டுப் பார்த்தது.
‘நல்லெண்ணெய்யை விட ரீஃபைண்ட் எண்ணெய்களின் விலை குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்குமோ..? என்று நினைத்தேன். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக வலிய போய் புற்றுநோயை விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டுமா என்ன?