Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

காஸ்ட் அவே - Page 3

Cast Away

Chuck தன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு சாலையையும் பார்க்கிறான். பின்னர் என்ன நினைத்தானோ, truck இல் வேகமாக சென்ற அந்தப் பெண் சென்ற திசையை நோக்கி, அவன் தன் பயணத்தைத் தொடர்கிறான்...

இந்தப் படம் தொடர்ந்து படமாக்கப்படவில்லை. Chuck கதாபாத்திரத்தில் நடித்த Tom Hanks சதைப் பிடிப்பான ஒரு நடுத்தர வயது கொண்ட மனிதனாக தெரிய வேண்டும் என்பதற்காக, அப்படிப்பட்ட உடல் நிலையில் அவர் ஆரம்பத்தில் படமாக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஒரு வருட காலம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தீவில் இருக்கும்  Tom Hanks படமாக்கப்பட இருந்ததால், அவர் தன் உடல் எடையை மிகவும் குறைத்துக் கொண்டார். தலையில் முடி புதரென வளர்ந்திருக்க, நீண்ட தாடி உண்டாக, அதற்குப் பிறகு மெலிந்து போன Tom Hanks தீவில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

Cast Away படத்தின் ‘தீவு’ சம்பந்தப்பட்ட காட்சிகள் Fiji இல் உள்ள Monuriki என்ற தீவில் படமாக்கப்பட்டன. இந்தப் படம் திரைக்கு வந்த பிறகு, அந்தத் தீவு ஒரு சுற்றுலா இடமாக மாறிவிட்டது. இந்தப் படத்திற்கு பிறகு FedEX என்ற பெயர் ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் மிகவும் பிரபலமாகி விட்டது.

இந்த படத்தில் நடித்ததற்காக Tom Hanksக்கு சிறந்த நடிகருக்கான Golden Globe Award கிடைத்தது.

Academy விருதுக்காகவும், Bafta விருதுக்காகவும் Tom Hanks இன் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.

Kelly Frears  ஆக மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். Helen Hunt. அதிலும் Tom Hanks ஐ Helen பார்க்கும் உச்சக் காட்சி இருக்கிறதே! படம் பார்ப்போர் அந்தக் காட்சியை எந்தக் காலத்திலும் மறக்கவே முடியாது!

ஒரு Volley Ballஐக் கூட ஒரு கதாபாத்திரமாக்கி, அதற்கு Wilson என்ற பெயரையும் சூட்டி அதை படம் முழுக்க இடம் பெறச் செய்த புதுமைக்காக நிச்சயம் நாம் இப்படத்தின் screen writer ஆன William Broyles, Jr. ஐப் பாராட்டியே ஆக வேண்டும்.

 Robert Zemeckis மிகவும் திறமையாக இயக்கியிருக்கும் ‘Cast Away’  நம் உள்ளங்களில் எப்போதும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும்.

 Tom Hanksம்தான்.

……………………………

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version