Lekha Books

A+ A A-
12 Mar

பத்திரிகை

pathirikai

பாலாவுக்கு அடுத்துள்ள சேர்ப்புங்கல் என்ற இடத்தில் ஒருநாள் காலையில் இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்ற ஒரு கடையின் திண்ணையில் அமர்ந்து பதினான்கு பிச்சைக்காரர்கள் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் வயதானவர்களும், நடுத்தர வயது உள்ளவர்களும், இளம் வாலிபர்களும்கூட இருந்தார்கள். தடிமனானவர்களும், உடல் மெலிந்தவர்களும், கறுப்பானவர்களும், மாநிறம் உள்ளவர்களும், வெளுத்த தேகத்தைக் கொண்டவர்களும் என்று பலவகைப்பட்டவர்களும் இருந்தனர்.

Read more: பத்திரிகை

12 Mar

க்ரயோஜனிக் எஞ்சின்

cryogenic engine

.எஸ்.ஆர்.ஓ திருட்டு வழக்கில் உங்கள் யாருக்குமே தெரியாத ஒரு மனிதன் சிறைக்குப் போயிருக்கிறான். அந்த ஆளின் கதைதான் இது. அந்த மனிதனின் பெயர் குட்டிகிருஷ்ணன். நம்பி நாராயணனையும், மரியம் ரஷீதையும், மற்றவர்களையும் காறித் துப்பவும், திட்டவும், முறைத்துப் பார்க்கவும் நீங்கள்கூட நினைத்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களுக்கு சாந்தி... ஓம் சாந்தி... சாந்தி! உங்களுக்கு இப்பொழுது பைத்தியம் எதுவுமில்லை அல்லவா? நமக்குள் பிசாசு ஓடிக்கொண்டிருந்த அந்த நாட்களில்தான் திருவனந்தபுரத்துக்காரனான குட்டிகிருஷ்ணன் என்ற நாவிதன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்தது.

Read more: க்ரயோஜனிக் எஞ்சின்

10 Mar

மூன்று துறவிகள்

munru thuravigal

ர்ச்சேஞ்சல் நகரத்திலிருந்து சோலோவெஸ்க் மடத்திற்கு ஒரு பாதிரியார் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் அந்த ஊரில் இருக்கும் கடவுள் உருவங்களை வணங்குவதற்காகச் செல்லும் நிறைய புனிதப் பயணிகளும் இருந்தார்கள். பயணம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. காற்று சாதாரண அளவிலேயே வீசிக்கொண்டிருந்தது. தட்பவெப்ப நிலையும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. புனிதப் பயணிகளில் சிலர் மேல்தளத்தில் படுத்திருந்தார்கள். சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலரோ கூட்டமாக உட்கார்ந்து ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

Read more: மூன்று துறவிகள்

10 Mar

வாய்மொழி வரலாறு

vaimozhi varalaru

ன்னுடைய எழுத்துகளால் ஆரம்ப காலத்திலேயே விவாதங்களை உண்டாக்கியவர் நேடின் கார்டிமர். அவருடைய முதல் நூலான "பட்ங் ப்ஹ்ண்ய்ஞ் க்ஹஹ்ள்" 1953-ஆம் ஆண்டு பிரசுரமானதுடன், ஒரு ஐரோப்பியனின் ஆப்ரிக்காவைப் பற்றிய சிந்தனைகள் சமூகத்தில் மாறின. ஆப்ரிக்காவின் சமீபகால வரலாற்றுக்கு ஒரு புதிய வடிவம் தருவதில் கார்டிமரின் படைப்புகளின் பங்கு அதிகம். வண்ணமயமான வெளிப்பாட்டுடன் கடுமையான அணுகு முறையை அவர் தன் எழுத்துகளில் கையாண்டார்.

Read more: வாய்மொழி வரலாறு

10 Mar

மதிப்பிற்குரிய தலைவர்

mathipirkuriya thalaivar

பொது அரசியல் வாழ்க்கையையும் இலக்கிய வாழ்க்கையையும் கைபிடித்துச் செல்வது என்பது ஆப்ரிக்கன் சமூகத்திற்குப் புதிதல்ல. ஹென்றி லோபெஸ், காங்கோவின் பிரதம அமைச்சராக இருந்தவர். பொது வாழ்க்கைக்கும் தனி மனித வாழ்க்கைக்குமிடையே நடக்கும் போராட்டங்களும், பொய்மைகளும், அரசியலும் நிறைந்தவையே இவரின் படைப்புலகம்.

Read more: மதிப்பிற்குரிய தலைவர்

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel