Lekha Books

A+ A A-

மாடல்

model

முதல் தரமான தையல்காரனாக இருந்தான் சி.பி. பிரான்சிஸ். வெளிநாடுகளைச் சேர்ந்த பல இடங்களுக்கும் போய் பலவிதப்பட்ட தையல் முறைகளை அவன் கற்றிருந்தான். கைக்குட்டையிலிருந்து கோட் வரை உள்ள எந்த உருப்படியையும் மிகவும் நல்ல முறையில் தைக்க முடியும் என்பதுதான் பிரான்சிஸின் பெருமையே.

அந்தக் கலையைப் பற்றி பிரான்சிஸுக்கு மிகவும் அதிகமாகக் கூறுவதற்கு விஷயங்கள் இருந்தன. அதில் யாருமே குறை கூற முடியாது. ஆனால், உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் பிரான்சிஸ் மிகப் பெரிய கருத்தை வெளியிடுவான். அதைத்தான் பலராலும் தாங்கிக் கொள்ள முடியாது.

எல்லா இடங்களையும் சேர்ந்த பெரிய ஆட்கள் பிரான்சிஸுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வெளிநாட்டு சுவை கொண்ட ஒவ்வொரு அனுபவக் கதையையும் அந்தப் பயணங்கள்மீது விருப்பம் கொண்ட மனிதனால் கூற முடியும். ஒருநாள் ஒரு மனிதர் கேட்டார்: பிரான்சிஸ், உங்களிடம் இருப்பவை அனைத்தும் காலர் வைத்த முழுக்கை சட்டைகளாகவே இருக்கின்றன. அதன் காரணம் என்ன?''

ஆமாம்... அதைக் கூறுகிறேன்''- பிரான்சிஸ் கூற ஆரம்பித்தான்: நான் மதராஸில் இர்வின் பார்க்கிற்கு அருகில் வசித்துக் கொண்டி ருந்தேன். அங்கு சட்ட உறுப்பினராக இருந்தவர் என்னுடைய ஒரு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் காலர் வைத்த முழுக் கைச் சட்டையையே அணிவார். இப்போது அவர் கல்கத்தாவில் இருக்கிறார். நாங்கள் ஒருநாள் கடற்கரைக்குச் சென்று காற்று வாங்கிக் கொண்டிருந்தபோதுதான் சட்ட உறுப்பினராக அவருக்கு ஆர்டர் கிடைத்தது. இனிமேல் நாம் காலர் வைத்த முழுக்கைச் சட்டையை மட்டுமே அணிய வேண்டும் என்று அன்று நாங்கள் தீர்மானித்தோம். இது வரை அதிலிருந்து தவறியதே இல்லை.''

ஒரு முறை ஒரு சந்தேகப் பேர்வழி பிரான்சிஸிடம் கேட்டார்: முதல் பாடத்தில் தையல்காரன், அய்யங்கார், அய்யாயிரம் என்று ஏன் எழுதப்பட்டிருக்கிறது?''

அதுவா? அதைக் கூறுகிறேன்...'' பிரான்சிஸ் தொடர்ந்து சொன்னான்: அப்போது நான் உபநிஷத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். சட்டை தைப்பதற்காக வந்த ஒரு சார், "ய்ய” என்று சேர்ந்து வருவதைப்போல சொற்கள் இல்லை என்று சொன்னார். நான் கேட்டேன்: "சார், என் தொழில் என்ன? "ய்ய” என்று வரும் அய்யாயிரம் சொற்கள் இருக்கின்றன. இதோ... அதோ நடந்து போகும் அய்யங்கார் சுவாமியைப் பாருங்கள்'' அவற்றையெல்லாம் அதே மாதிரி அவன் எழுதி வைத்திருந்தான்.

அறுபது வயதை நெருங்கிய பிரான்சிஸுக்கு ஒரு வெள்ளெழுத்து கண்ணாடி அணிய வேண்டிய அவசியமிருந்தாலும், அவன் அதைப் பயன்படுத்துவதில்லை. அந்த விஷயத்தைப் பற்றி அவன் கூறுவதுண்டு. நம்மைப் பார்த்து உரையாடுபவர்களின்மீது கண்களுக்கு ஒரு சக்தி இருக்கிறது. கண்ணாடி அணிந்தால் அது இழக்கப்பட்டு விடும்.''

நீளமானவையாகவும் தெளிவானவையாகவும் வெளியே குதிப்பதற்குத் தயாராக இருப்பவை மாதிரி தோன்றக் கூடியவையுமான பிரான்சிஸின் கண்களுக்கு ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு சக்தி இருந்தது. அவனிடம் ஒரு இளைஞனிடம் இருக்கக் கூடிய உற்சாகம் தவழ்ந்து கொண்டிருந்தது. ஒரு பிரகாசமான முகத்தைக் கொண்டவனாக பிரான்சிஸ் இருந்தான். உடற்பயிற்சியிலும் உணவு விஷயங்களிலும் அவன் அந்த அளவிற்கு மிகவும் கவனம் உள்ளவனாக இருந்தான். சானட்டஜனை பயன்படுத்தி அடை தயாரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரான்சிஸுக்கு உடல் நல விஷயங்கள் எப்படி மோசமாக இருக்கும்?

இந்தியாவே தெரிந்திருக்கும் மனிதனாக இருந்தாலும் பம்பாயிலோ கல்கத்தாவிலோ டில்லியிலோ திருவாங்கோட்டில் இருப்பதைப் போன்ற ஒரு வரவேற்பு பிரான்சிஸுக்கு கிடைக்கவில்லை. தையல் சம்பந்தமாக சொற்பொழிவு செய்வதற்கு தான் ஆரம்பத்தில் பிரான் சிஸ் திருவாங்கோட்டிற்கு வந்தான். பிரான்சிஸின் முதல் சொற் பொழிவிற்கு நல்ல வர்த்தக விளைவு உண்டானது. அரண்மனையின் தையல் வேலைகள் முழுவதும் பிரான்சிஸைத் தேடி வந்தன. அந்த அளவிற்கு பெண்களுக்கு பிரான்சிஸின் தையல் வேலைகள் மிகவும் பிடித்திருந்தன.

பிரான்சிஸ் கூறுவதுண்டு: தைப்பதில் அல்ல... வெட்டுவதில்தான் தையல்காரனின் வெற்றி இருக்கிறது.'' அவன் துணி வெட்டுவதைப் பார்த்தால் அதில் பணம் முதலீடு செய்திருப்பவர்களுக்கு பயம் உண்டாகிவிடும். டாக்டர் மனித உடலில் அறுக்கக் கூடிய கருவி களைப் பயன்படுத்துவதைப் போலத்தான் பிரான்சிஸ் துணி மீது கத்திரியைப் பயன்படுத்துவான். கத்திரி அந்த விரல்களின் பிடியில் இருந்து கொண்டு "கர்க்கு.... கர்க்கெ” என்று இடைவெளி இல்லாமல் அழுது கொண்டிருக்கும். வெட்டும் விஷயத்தில் பிரான்சிஸை வெற்றிபெறக் கூடிய தையல்காரன் இல்லவே இல்லை என்றுதான் கூற வேண்டும். புகழ் பெற்ற வெட்டுக்காரனான வெல்லிங்டன் துரையிடமிருந்துதான் பிரான்சிஸ் துணி வெட்டும் கலையையே கற்றுக் கொண்டான். மிகவும் விலை மதிப்புள்ள துணிகளில் ஈவு, இரக்கமே இல்லாமல் கத்திரியைச் செலுத்துவதில் பிரான்சிஸுக்கு தயக்கம் என்பதே கிடையாது. பிரான்சிஸ் தன்னுடைய முழுக்கைச் சட்டைக்கு மேலே தோளில் ஒரு டேப்பைத் தொங்க விட்டிருப்பான். சட்டையின் முன் பகுதியில் நூலுடன் ஒரு ஊசியைக் குத்தி வைத்திருப்பான். இடது கையின் நடுவிரலின் நுனி டிம்பிள் மூலம் மறைக்கப்பட்டிருக்கும்.

பிரான்சிஸின் மேஜை தனித்துவம் கொண்டதாக இருக்கும். அதன் இழுவைகளில் தனித்துவம் கொண்ட நூல் கண்டுகள், ஊசிகள், பென்சில்கள் ஆகியவை பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு இழுவை நிறைய கேட்லாக்குகள் இருக்கும். இங்க்லாண்ட், அமெரிக்கா, ஃப்ரான்ஸ்... இப்படி வெளி நாடுகளில் இருந்து விசேஷ மாக வரவழைக்கப்பட்டிருக்கும் தையல் சம்பந்தமான கேட்லாக்குகள்... அந்த கேட்லாக்குகளைப் பார்த்துத்தான் பிரான்சிஸ் மாதிரியைத் தீர்மானிப்பான். நிறம், இனம், பருவம், வயது... இவற்றையெல்லாம் குறிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சிறு குழந்தைகளுக்கான ஆடைகள், இரவிக்கைகள், ஜிப்பா, பேன்ட், பைஜாமா- இவை உள்ள பல வகையான மாதிரிகளையும் படங்களையும் தன்னுடைய தையல் கடையில் பிரான்சிஸ் தொங்க விட்டிருந்தான். ஆட்கள் தையல் சம்பந்தமாகப் பேசினால், உடனடியாக பிரான்சிஸ் கேட்பான்:  வயசு என்ன? என்ன நிறம்? ஆணா, பெண்ணா?''

அந்த கிராமப் பகுதியில் ஓணம் வந்தது. ஓண நிலவும் ஓண மலர்களும் பிரகாசித்தன. வாழ்க்கையில் கஷ்டங்கள் எவ்வளவு இருந்தாலும், திருவோணம் என்ற அந்தத் திருவிழாவிற்கு முன்னால் எல்லா வீடுகளும் சந்தோஷத்தில் திளைக்கின்றன. ஒவ்வொரு இதயமும் ஆனந்தத்தில் மூழ்குகின்றன. துயரங்கள் நிறைந்த வாழ்க்கையை சந்தோஷத்தில் ஆழ்த்தும் இந்த பண்டிகைகள் பறந்து போகாமல் இந்த நாட்டின் பசுமையான காடுகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

எல்லாரும் புதுத் துணிகள் வாங்குகிறார்கள். சட்டைகளைத் தைக்கிறார்கள். பாப்பனுக்கும் ஒரு சட்டை வேண்டும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel