கத்தரிக்காய் பொரிச்ச கூட்டு
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2412
கத்தரிக்காய் பொரிச்ச கூட்டு
(Brinjal Koottu)
தேவையான பொருட்கள் :
• கத்தரிக்காய் : 250 கிராம்
• சிறுபருப்பு : 50 கிராம்
• உளுத்தம் பருப்பு : 1 தேக்கரண்டி
• தேங்காய்துறுவல் : 2 தேக்கரண்டி
• சீரகம் : 1 தேக்கரண்டி
• கருவேப்பிலை : சிறிது
• சிகப்பு மிளகாய் : 2
• மஞ்சள்தூள் : 2 சிட்டிகை
• கடுகு : 1 தேக்கரண்டி
• உப்பு : தேவையானஅளவு
• இதயம் நல்லெண்ணெய் : 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
சிறுபருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். (அதிகம் குழையாமல் வேகவைப்பது அவசியம்) கத்தரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காய்துறுவல், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, சிகப்பு மிளகாய் போட்டுத் தாளித்து இத்துடன் வேகவைத்துள்ள சிறுபருப்பு, கத்தரிக்காய், உப்பு, அரைத்த தேங்காய் - சீரகக் கலவையைப் போட்டு கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
(சிறுபருப்பை, பாசிப்பருப்பு என்றும் குறிப்பிடுவது வழக்கம்.)