பூரி உருளைக்கிழங்கு
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2096
பூரி உருளைக்கிழங்கு
(Potato For Poori)
தேவையான பொருட்கள் :
• உருளைக்கிழங்கு : 500 கிராம்
• தக்காளி : 2
• பெரிய வெங்காயம் : 3
• பச்சை மிளகாய் : 5
• கருவேப்பிலை : சிறிது
• சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லித்தழை : 2 மேஜைக்கரண்டி
• கடுகு : 1 தேக்கரண்டி
• கடலைப்பருப்பு : 1 தேக்கரண்டி
• மஞ்சள்தூள் : 4 சிட்டிகை
• உப்பு : தேவையான அளவு
• இதயம்¸நல்லெண்ணெய் : 3 மேஜைக்கரண்டி
செய்முறை :
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (அதிகமாக பிசைந்து விடாமல் சிறு சிறு துண்டுகளாக இருப்பது போல் கவனம் கொள்ள வேண்டும்.)
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
தக்காளியை ஆறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலி அல்லது கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
நன்றாக வதங்கியபின் சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் போடவும்.
இத்துடன் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும்.
ஓரளவு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை போட்டு இறக்கி உபயோகிக்கவும். (பூரிக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாகும்.)