இனிப்பு எள்ளு தட்டை
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 3138
இனிப்பு எள்ளு தட்டை
(Sweet Sesame Snack)
தேவையான பொருட்கள் :
• பச்சரிசி : 400 கிராம்
• உளுத்தம்பருப்பு : 2 மேஜைக்கரண்டி
• உருண்டை வெல்லம் : 350 கிராம்
• வெள்ளை எள் : 100 கிராம்
• இதயம் நல்லெண்ணெய் : 300 மி.லி.
செய்முறை :
பச்சரிசியை ஊறவைத்து, மாவாக்கிக் கொள்ளவும்.
உளுந்தம்பருப்பை லேஸாக வறுத்து, நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
அரிசி மாவுடன், எள், உளுத்தம்பருப்பு மாவு -இவற்றைக் கலந்து கொள்ளவும்.
வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, (சுமாராக இரண்டு மேஜைக்கரண்டி ஊற்றலாம்.)
இத்துடன் பொடித்து வைத்துள்ள வெல்லத்தைப் போட்டு இளம்பாகு காய்ச்சவும்.
இளம்பாகு வந்ததும் அரிசிமாவில் ஊற்றிக் கிளறவும். ஆறியபின் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, பாலிதீன் ஷீட்டில் தட்டை தட்டுவது போல தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுத்து உபயோகிக்கவும்.