எறா மசாலா
- Details
- Category: சமையல்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 2176
எறா மசாலா
(Prawn Masala)
தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
தேவையான பொருட்கள் :
• சுத்தம் செய்த எறா - 500 கிராம்
• பெரிய வெங்காயம் - 1
• பூண்டு - 6 பல்
• தக்காளி - 1
• இஞ்சி - 4 அங்குலம்
• சோம்பு - அரை தேக்கரண்டி
• கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
• சீரகத்தூள் - 3 தேக்கரண்டி
• மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
• மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
• மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
• உப்பு - தேவையான அளவு
• இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்
செய்முறை :
பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, இஞ்சியை மிக சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதனுடன் நறுக்கிய பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
பின், அதனுடன் எறாவைப் போட்டு வதக்கி, சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டுக் கிளறி, மூடி வைக்கவும்.
எறா வெந்து, மசாலா கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,