
போலீஸ்காரர்கள் எல்லாரையும் விசாரித்தார்கள். தூக்க மாத்திரைகள் சாப்பிட முயன்ற என் தந்தையைத் தடுத்தவாறு ஒரு போலீஸ் அதிகாரி கேட்டார்:
“நீங்கள் எதையும் பார்க்கலையா? ஒரு சத்தத்தையும் கேட்கலையா? உங்களுக்கு அருகில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு ஆள் கொலை செய்றப்போகூட நீங்கள் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தீர்களா?''
என் தந்தை சாதாரணமாக இரண்டோ மூன்றோ தூக்க மாத்திரைகளை உட்கொள்ளுவது உண்டு. அதன் காரணமாக இருக்க வேண்டும் - என் தந்தையின் உறக்கம் கனமாகிவிட்டது. ஆனால், அவர்கள் அந்தக் கதையை நம்புவார்களா? மணிக்கணக் கில் அவர்கள் என் தந்தையிடம் கேள்விகள் கேட்டார்கள். இறுதியில் கழற்றிப் போட்ட ஆடையைப் போல கிடந்த உயிரற்ற உடல்மீது என் தந்தை அழுது கொண்டே போய் விழுந்தார்.
வேலைக்காரர்களையும் போலீஸ்காரர்கள் விசாரணை செய்தார்கள். "ஸ்ரீதேவிக்குட்டியோட பூனையின் ஆவி எஜமானியைக் கொன்னிருக்கலாம்” என்று என்னுடைய வேலைக்காரி அவர்களிடம் கூறினாள். அவள் கூறியதை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. போஸ்ட்மார்ட்டத்திற்காக பிணத்தைக் கொண்டு போன பிறகு, எனக்காக அந்த ஸ்டேஷன் வேகன் வந்தது. ஏற்கெனவே தெரிந்த சிலர் என்னை வண்டியில் ஏற்றியபோது, நான் எதிர்ப்பு காட்டவில்லை. நான் போவதைப் பார்த்து என் தந்தை அழவும் இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook