Logo

ஆர்கோ

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3963
Argo

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

ஆர்கோ


ர்கோ – நான் முழுமையான ஈடுபாட்டுடன் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் ‘ஆர்கோ.’ சென்ற ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை இந்தப் படம்தான் தட்டிச் சென்றிருக்கிறது.

1979ஆம் ஆண்டில் ஈரானில் இஸ்லாமிக் புரட்சி நடைபெற்றபோது, அமெரிக்காவைச் சேர்ந்த சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கின்றனர்.

அவர்களை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அதிகாரிகள் எப்படி விடுவித்து தங்கள் நாட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

அறிவியல் பின்புலம் கொண்ட ஒரு திரைப்படக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற போலி அடையாளங்களைத் தயார் பண்ணித்தான் அவர்கள், பிணைக் கைதிகளை தப்பிக்கச் செய்து கொண்டு போகிறார்கள்.

புதுமையான கோணத்தில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை. அனைத்தும் முடிந்து, எல்லோரும் விமானத்திற்குள் போய் அமர, விமானம் கிளம்பும் நிலையில் இருக்க, டெஹ்ரான் விமான நிலைய அதிகாரிகளுக்கு உண்மை தெரிய வர, அவர்கள் ஒரு காரில் விமானத்தை நிறுத்துவதற்காக புயலென பாய்ந்து செல்ல, அதற்குள் விமானம் ‘விர்’ என காற்றைக் கிழித்துக் கொண்டு வானத்தில் உயர… இந்தக் காட்சியில் என்னை மறந்து நான் கைகளைத் தட்டினேன்.

தகுதி உள்ள ஒரு படத்திற்கு விருது தரப்பட்டிருக்கிறது என்பதை நினைத்து சந்தோஷப் படலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.